ஆம்பூர் | திடீரென தீப்பற்றி எரிந்த வீடு - ரூ.1.5 லட்சம் பணம், 3 சவரன் தங்க நகை எரிந்து நாசம்!
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இன்று பிற்பகல் இவரது வீட்டில் திடீரென மின்கசிவின் காரணமாக டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவை தீப்பற்றி எரிந்துள்ளது, இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் ,
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்ததில், வீட்டிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம், 3 சவரன் தங்க நகை உடமைகள், ஆவணங்கள், மற்றும் வீட்டிலிருந்து பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.