மதுபானக் கடையை அகற்றக்கோரி பாஜகவினர் போராட்டம்.புதிய தலைமுறை
தமிழ்நாடு
ஆம்பூர்: பள்ளி எதிரே திறக்கப்பட்ட தனியார் மதுபானக் கடை... அகற்ற கோரி பாஜக போராட்டம்!
ஆம்பூரில் பள்ளி எதிரே திறக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பொழுது போக்கு மதுபானக் கடையை அகற்றக்கோரி பாஜகவினர் போராட்டம்.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
ஆம்பூரில் பள்ளி எதிரே திறக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பொழுது போக்கு மதுபானக் கடையை அகற்றக்கோரி பாஜகவினர் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள ஆம்பூர் - பேர்ணாம்பட் புறவழிச் சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கெனவே மூன்று மதுபான கடைகள் உள்ளன.
புதிய மதுபானக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம்
இந்நிலையில், இப்பகுதியில் அரசு உதவிப்பெறும் பள்ளியிக்கு எதிரே 10 மீட்டர் தொலைவிலும், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு தனியார் பார் இன்று திறக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்றக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர், அதன் எதிரே கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.