பெங்களூரு பண்ணை வீட்டில் நடந்த போதைப்பொருள் விருந்து... சிக்கிய நடிகர், நடிகைகள்

பெங்களூருவில் பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் நடிகைகள் உள்பட 86 பேர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
பண்ணை வீட்டில் நடந்த மதுவிருந்து
பண்ணை வீட்டில் நடந்த மதுவிருந்துpt web

பெங்களூரு புறநகர் பகுதியில் கடந்த 19-ஆம் தேதி மதுவிருந்து நடந்த பண்ணை வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

மேலும் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததும் இதில் தெலுங்கு திரையுலகினர் பலர் கலந்து கொண்டதும் கண்டறியப்பட்டது. இதற்கிடையே பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் முடிவுகளின்படி விருந்தில் பங்கேற்றவர்களில் 86 பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. குறிப்பாக தெலுங்கு நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் ஆகிய இரண்டு பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 59 ஆண்களும், 27 பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களுக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்ப உள்ளனர். பின்னர் அவர்கள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சோதனை நடத்தியபோதே ஐந்து பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com