மாவட்டம் தாண்டும் மதுகுடிப்போர்: சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

மாவட்டம் தாண்டும் மதுகுடிப்போர்: சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு
மாவட்டம் தாண்டும் மதுகுடிப்போர்: சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படாததால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். 

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் கொரோனா பாதிப்பின் காரணமாக தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அரசு மதுபான கடைகள் திறக்கப்படாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மதுகுடிப்போர் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கறம்பக்குடி, நாயக்கர்பட்டி, ரெகுநாதபுரம், கைகாட்டி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளுக்கு படையெடுத்து வந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மது பாட்டில் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த ராஜ்குமார் என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் காயமடைந்த 3 நபர்கள் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மது பாட்டில்கள் வாங்குவதற்காக வரும் அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் கறம்பக்குடி வட்டாட்சியர் உத்தரவின்பேரில் மாவட்ட எல்லைகளில் ஐந்து இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு அவளே வரும் நபர்களின் ஆதார் காதுகளை சரிபார்த்த பின்பே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

அதேபோல் டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ஆதார் கார்டுகளை காண்பித்து அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே மட்டுமே மதுபாட்டில்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், வெளி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வருவோரின் எண்ணிக்கை குறையாததால் இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் வருபவர்களை கண்காணித்து திருப்பி அனுப்பவும் வழிவகை செய்ய வேண்டும் என கறம்பக்குடி வர்த்தக சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com