அபி சித்தர் குற்றச்சாட்டும்.. அமைச்சர் மூர்த்தியின் விளக்கமும்

அபிசித்தரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு வீரர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார் அமைச்சர்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுபுதிய தலைமுறை

வாடிவாசல் வழியே பாய்ந்தோடி வரும் காளைகளை பிடிக்க, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் தயாராக இருந்தனர். போட்டி தொடங்கியதுதான் தாமதம், ஒவ்வொரு சுற்றும் அதகளம்தான். காளைகள் ஒவ்வொன்றும் சிங்கம் போல சீறி வந்தன.

என்னை அடக்க வர்றியா? நீ அடங்கிறியா என்பது போல பல காளைகள் மிரட்டின. மாடுபிடி வீரர்களும் கொஞ்சமும் சளைக்காமல் ஏறு தழுவினர். பெரிய திமிலும், முறுக்கேறிய கொம்புகளுமாக வந்த காளைகள் ஒவ்வொன்றும் வீரர்களுக்கு இணையாக போட்டியிட்டன.

மாலை 5 மணிக்கு போட்டி முடியவேண்டிய சூழலில், நிர்ணயித்த நேரத்தை கடந்து போட்டி நீடித்தது. இதனால் ஒருமணிநேரம் போட்டி நீட்டிக்கப்பட்டு 6 மணிவரை நீடித்தது. இதில் ஒன்பது மற்றும் பத்தாம் சுற்றுகள் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்தன. 9 ஆவது சுற்று முடிவில் 710 காளைகள் களம் கண்டன. 190 மாடுகள் பிடிமாடுகளாகின. 450 வீரர்கள் ஏறுதழுவினர். வெள்ளியங்குன்றம் ஆண்டிச்சாமி கோயில் மாடு, வீரர்களை தொட விடாமல் விளையாடியது - காளை உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.

இந்த சுற்றில் சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர், எம்.குன்னத்தூரைச் சேர்ந்த திவாகர், கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் தலா 11 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தனர். ஆனால் அதன் பிறகு போட்டி மிகவும் கடுமையாகியது. கார்த்திக் மற்றும் அபிசித்தர் இடையே போட்டி மிகவும் விறுவிறுத்தது.

இறுதிச்சுற்றிலும் கார்த்திக்குக்கும் அபி கடைசி 5 காளைகள் அவிழ்க்கப்பட்டபோது போட்டி மேலும் மும்முரமானது. பரபரப்பான கடைசி தருணங்களில் 18 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார் 17 காளைகளை பிடித்து அபிசித்தர் 2 ஆவது இடம் பிடித்தார்.

ஜல்லிக்கட்டு
பெரம்பலூர்: அனுமதியின்றி பாஜக கொடியேற்றியதாக பாஜகவினர் 4 பேர் கைது

ஒருகட்டத்தில் 17 காளைகளை பிடித்து இருவரும் சமநிலை வகித்தனர். இந்நிலையில் தாமே முதலிடம் பிடித்ததாகவும், போட்டி நேரம் நீட்டிக்கப்பட்டது தவறு என்றும் அபிசித்தர் குற்றம் சாட்டினார். அபிசித்தரின் குற்றச்சாட்டுகளுக்கு அபிசித்தரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்தார். இரண்டு வீரர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

முன்னதாக அபிசித்தர் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றிருந்தார். 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கார்த்திக், இந்த முறை அந்த மீண்டும் வெற்றி பெற்றார். முதல் பரிசு பெற்ற கார்த்திக்குக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சி மேலூர் குணாவின் மாடான கட்டப்பா முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றது. மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் மாடு இரண்டாம் இடம் பிடித்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com