Accused
Accusedpt desk

பெரம்பலூர்: அனுமதியின்றி பாஜக கொடியேற்றியதாக பாஜகவினர் 4 பேர் கைது

பெரம்பலூர் அருகே அனுமதியின்றி பாஜக கொடியை ஏற்றியதாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

பெரம்பலூர் மாவட்டம் மறவநத்தம் பகுதியில் நேற்று அனுமதியின்றி பாஜக கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் இன்று அதிகாலை பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், மணிகண்டன், வெங்கடேசன், சுரேஷ் உள்ளிட்ட நால்வரை போலீசார், கைது செய்தனர்.

Flag hosting
Flag hostingpt desk

இதையடுத்து 14/24 U/S147,148, 294(b),448 506 (ii),295,298, 153 (A), 505 (i) (B) IPC ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நால்வரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் திருச்சி மாவட்ட லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com