அஜித்குமார் - நவீன்
அஜித்குமார் - நவீன்pt

அஜித்குமார் விவகாரத்தில் அவிழும் முடிச்சுகள்! யார் அழுத்தத்தில் இவை அத்தனையும்?

அஜித்குமார் விவகாரத்தில் அவிழும் முடிச்சுகள்! யார் அழுத்தத்தில் இவை அத்தனையும்? கைமாறிய வழக்கு . என்ன நடக்கிறது?
Published on

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை தமிழக போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணை ஆவணங்களும், வீடியோ ஆதாரங்களும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளும், சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பது யார்? யாரின் தூண்டுதலின் பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டார்கள்.. உள்ளிட்ட பல முடிச்சுகள் அவிழும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக, தனிப்படை போலீஸார் தாக்கியதில் கோவில் காவலாளியான மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார், கடந்த ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ajithkumar, tn police, stalin
ajithkumar, tn police, stalinx page

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, அஜித்குமாரின் உறவினர்கள், கோயில் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையை உடனடியாக தொடங்கி, ஆகஸ்ட் 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை தமிழக போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணை ஆவணங்களும், வீடியோ ஆதாரங்களும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளும், சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அஜித்குமார் - நவீன்
அஜித்குமார் - நவீன்pt

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பல முக்கிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் முக்கியமாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டது ஏன்? சீருடை இல்லாமல் 30 கிமீ தூரத்திலிருந்து போலீசார் ஏன் வந்தனர்? யார் அழுத்தத்தில் இது நடந்தது? போன்ற கேள்விகள் சிபிஐ விசாரணையில் பதில்கள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், நிகிதா என்பவர் மீது ஏற்கனவே ரூ.16 லட்சம் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு பணம் வாங்கி வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக நிகிதா மீது FIR பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அஜித்குமாருக்கு எதிராக புகார் அளித்த நிகிதா பற்றிய பின்னணி மற்றும் சாத்தியமான தாக்கங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணையில் முக்கிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் இருக்கக்கூடும் என்றும் தெரிகிறது. இது போலீசாரின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் அளவுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தமிழ்நாட்டின் காவல் துறைச் செயல்பாடு மற்றும் பொது நம்பிக்கையைப் பெரிதும் பாதித்த நிலையில், சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com