மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் - நாள்தோறும் தகவல்களை வெளியிட நிர்வாகம் முடிவு!

மதுரை எய்ம்ஸ் ஒப்பந்தம் துவக்கம் தினசரி அப்டேட்கள் அறிவிப்பு
மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்PT

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக, பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் கட்டுமான பணிகள் குறித்த தகவல்களை தினம்தினம் வெளியிட மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து குற்றம்சாட்டிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்பொழுது பிரபல தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதனால் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கட்டுமான பணி தொடர்பாக தினம் தினம் புது தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com