அதிமுக - பாமக கூட்டணி உறுதி; ராமதாஸை சந்திக்கும் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு!

மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக அதிமுக கூட்டணி
பாமக அதிமுக கூட்டணிpt web

மக்களவைத் தேர்தல் பரபரப்பு தேசம் முழுவதும் எதிரொலிக்கும் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் அதிமுக - பாமக - தேமுதிக கூட்டணி இறுதியாகியுள்ளது.

anbumani
anbumanipt web

நாளை மறுதினம் (மார்ச் 20) தொகுதிப் பங்கீட்டுக்கான உடன்படிக்கை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை தைலாபுரத்தில் சந்திப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாமக அதிமுக கூட்டணி
அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி; தொகுதிகள் என்னென்ன?

பாமகவிற்கு வட தமிழகத்தில்தான் பலம் அதிகம். எனவே, கூட்டணி இறுதியானால் மயிலாடுதுறை, தர்மபுரி, சேலம், கடலூர், ஆரணி, சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளை பாமக எதிர்பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com