திருப்பரங்குன்றம், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர்
திருப்பரங்குன்றம், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர்pt web

திருப்பரங்குன்றம்: “ஆட்சியர் அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்” - அதிமுக எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆட்சியர் அறிக்கையை திரும்பப்பெறாவிட்டால், நீதிமன்றத்தை நாடப்போவதாக அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
Published on

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதாக, பல்வேறு தரப்பினர் கையெழுத்திட்டனர். இதில், அதிமுக பிரதிநிதி மட்டும் கையெழுத்திட மறுத்துவிட்டதாக, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்றம் மலை

இதனை மறுத்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அமைதி பேச்சுவார்த்தைக்கு தங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை எனவும், அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். வேண்டுமென்றே ஆட்சியர் தவறான தகவலை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

திருப்பரங்குன்றம், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர்
“ஞானசேகரன் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” உயர்நீதிமன்றத்தில் மனு

இந்த நிலையில், ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, அவரது அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தினர். பின்னர் பேட்டியளித்த ராஜன் செல்லப்பா, அறிக்கையை ஆட்சியர் திரும்பப் பெறாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தெரிவித்தார்.

ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ
ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூpt web

பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மக்கள் பிரதிநிதியான என்னை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பங்கேற்றுள்ளதாக பொய்யான தகவலை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண் பழி போட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளோம். யாரோ எழுதி அனுப்பிய அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிலைப்பாடு குறித்து கூற முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்” என கூறினார்.

திருப்பரங்குன்றம், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர்
விக்கெட் வேட்டையாடிய ஹர்ஷித்.. முதல் போட்டியிலேயே புதிய சாதனை..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com