"திரிஷா எவ்வளவு மன கஷ்டப்பட்டு அந்த பதிவை போட்டிருப்பார்”-முன்னாள் நிர்வாகியை விளாசிய ஜெயக்குமார்!

”ராஜூ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இழிவுபடுத்த கூடாது. நடிகை திரிஷா எவ்வளவு மன கஷ்டப்பட்டு அந்த (எக்ஸ்) பதிவை போட்டிருப்பார்” ஜெயக்குமார்
ஜெயக்குமார்
ஜெயக்குமார்pt web

நடிகை த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு கண்டனங்கள் வந்த நிலையில், அவர் மன்னிப்பு கோரி வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜூ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது. விருப்பமனு விநியோகத்தை நேரில் வந்து பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “ராஜூ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இழிவுபடுத்த கூடாது. நடிகை திரிஷா எவ்வளவு மன கஷ்டப்பட்டு அந்த (எக்ஸ்) பதிவை போட்டிருப்பார். அருவருக்கத்தக்க ஒன்றாகத்தான் பார்க்கின்றேன்.

கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும் தாருமாறாக பேசி இருக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்மையை இழிவுபடுத்தியும், பொதுச் செயலாளரை இழிவு படுத்தியும், இத்தகைய கேவலமான நடக்காத விஷயங்களை பேசி கட்சிக்கு களங்கத்தையும், த்ரிஷாவை இழிவுபடுத்தியும் கூறிய கருத்துக்கள் நிச்சயமாக மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்.

கூட்டணி நன்றாக தான் இருக்கிறது. ஒன்றும் பிரச்சினை இல்லை. பொதுச் செயலாளர் சொல்லி இருக்கிறார். இன்னும் ஒரு மாதம் காலம் இருக்கிறது.‌ கடைசி நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று பொதுச் செயலாளர் சொல்லி இருக்கிறார். அந்த நம்பிக்கை அடிப்படையில் எங்கள் தலைமையில் சில கட்சிகள் சேரும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com