”செந்தில் பாலாஜிக்கு பெரியார் பற்றி பேச தெரியுமா; விசிகவில் 20 பேர் மட்டுமே உள்ளனர்” - ஆதவ் அர்ஜூனா
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ”தவெக புதிய கட்சி, இளைஞர்கள் மட்டும் தான் இருக்கிறார். அது வெறும் ரசிகர் கூட்டம் மட்டும் தான் என திமுகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், இன்று 2,700 மாவட்ட, மாநகராட்சி செயலாளர்கள் கழகத்தின் செயல்வீரர்களாக இங்கு அமர்ந்திருக்கின்றனர்.
நீங்கள் சொல்வது போல இங்கு இருப்பவர்கள் தேர்தலுக்கு புதிதல்ல, திமுக அதிமுக செய்யும் தவறுகளை தெரிந்து கொண்டு தவெகவில் இருக்கிறார்கள். அதேசமயத்தில், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளின் வீடுகளிலும் தவெகவினர் இருக்கின்றனர்.
திமுக அமைச்சர்கள் வீடுகளிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் வீடுகளிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். மேலும், விசிக தொண்டர்கள் தவெக வெற்றிக் கழகத்துக்கு மாறி விட்டார்கள். விசிகவில் திருமாவளவன் உட்பட வெறும் 20 பேர் இருக்கிறார்கள். திமுக விசிகவை அடியாளாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்து 24 கட்சிகளை எதிர்த்து நிற்கின்றனர். திமுக 13 கட்சி கூட்டணியுடன் இருக்கிறது. அதிமுக 8 கட்சி கூட்டணியுடன் இருக்கிறது. ஆனால், விஜய் மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். 75 வருடங்களில் அம்பேத்கரையும் பெரியாரையும் ஒன்றாக இணைத்த ஒரே கட்சி தவெக தான். பெரியார் குறித்துப் பேசும் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பெரியார் அம்பேத்கர் சிலை ஏன் இல்லை. இது குறித்து திருமாவளவன் ஏன் கேட்கவில்லை.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள், திருமா அண்ணன் ஆகியோர்கள் இணைந்து திமுக ஊழல் இல்லாத கட்சி, செந்தில் பாலாஜி ஊழல் இல்லாதவர் எனப் செய்தியாளர் சந்திப்பில் பேச பேச முடியுமா? எங்களைப்பற்றி, அடிக்கடி கொள்கை குறித்துப் பேசுகிறார்கள். செந்தில் பாலாஜி 2 நிமிடம் பெரியார் குறித்து மேடையில் பேசத்தெரியுமா?. ஸ்டாலினிடம்
எம்.ஜி.ஆர் கூட்டணிகளை நம்பி கட்சி உருவாக்கவில்லை.. தாய்க்குலங்களை நம்பி உருவாக்கினார். அதுபோலவே, தவெக தலைவர் விஜயும் தமிழக மக்களை நம்பி மட்டுமே கட்சியை உருவாக்கியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
