வளர்ப்பு மகளால் தாக்கப்பட்ட நடிகை ஷகிலா

நடிகை ஷகிலாவையும் அவரது வழக்கறிஞரையும் தாக்கிய விவகாரத்தில், ஷகிலாவின் வளர்ப்பு மகளிடமும் அவரது தாயாரிடமும் போலீசார் விசாரணை.
ஷகிலா
ஷகிலாPT

செய்தியாளர் - அன்பரசன்

நடிகை ஷகிலா, தற்போது கோடம்பாக்கம் யுனைடெட் காலனி பகுதியில் வசித்து வருகிறார். சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், தனியாக யூ-ட்யூப் சேனல் நடத்தியும் வரும் ஷகிலா, தன் அண்ணன் மகளான சீத்தல் என்பவரை ஆறு மாத குழந்தையிலிருந்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், சீத்தல் நடிகை ஷகிலாவை தாக்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி அவரது தாய் சசி என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஷகிலா
"ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலை பட்சமாக நடந்தது"- மாடுபிடி வீரர் அபிசித்தர் ஆட்சியரிடம் புகார்

இதனையடுத்து ஷகிலாவின் தோழி நர்மதா அளித்த தகவலின் பேரில் அவரது வழக்கறிஞர் சௌந்தர்யா, சீத்தலுக்கு போன் செய்து ஷகிலா வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் தன் அக்கா ஜமீலா மற்றும் தாய் சசியோடு அங்கு சீத்தல் வந்ததாக தெரிகிறது.

அப்போது ஜமீலா மற்றும் சசி ஆகியோரிடம் ஷகிலா மற்றும் அவரது வழக்கறிஞர் பேசி வந்துள்ளனர். அச்சமயத்தில் திடீரென சீத்தல் அங்கிருந்த டிரேவை எடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யாவின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சீத்தலின் தாய் சசியும் வழக்கறிஞர் சௌந்தர்யாவின் கையை கடித்துவிட்டு காயம் ஏற்படுத்திவிட்டு, ஷகிலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து அனைவரும் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பெண் வழக்கறிஞர் சௌந்தர்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் இந்த சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com