"ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலை பட்சமாக நடந்தது"- மாடுபிடி வீரர் அபிசித்தர் ஆட்சியரிடம் புகார்

வெற்றியாளர் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அபிசித்தர் தெரிவித்துள்ளார்.
அபிசித்தர்
அபிசித்தர்pt desk

செய்தியாளர்: சுபாஷ்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 18 காளைகளைப் பிடித்து கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். 17 காளைகளை பிடித்த சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் இரண்டாமிடம் பிடித்ததாக விழா கமிட்டி அறிவித்தது.

jallikattu
jallikattufile

இதனை ஏற்க மறுத்த அபிசித்தர் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அபிசித்தர் மனு அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டை போட்டியாக நடத்த வேண்டும். இதை அரசியலாக நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன். ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கும் அனைவருக்கும் கார், பைக் போன்ற பரிசுகளுக்கு பதிலாக அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும். அது ஜல்லிக்கட்டு வீரனுக்கும் மரியாதையா இருக்கும். நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com