“நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?” - கொந்தளித்த குஷ்பு!

“வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல்தான் சேரி எனக் கூறினேன். ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும்போது நான் ஏன் அதை சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்?” - நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி
குஷ்பு
குஷ்புபுதிய தலைமுறை

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, சமீபத்தில் மன்சூர் அலிகான த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு வந்த சில எதிர்பதிவுகளுக்கும் பதிலளித்தார் அவர். அப்படியான பதிவு ஒன்றில், “சிலரை போல என்னால் சேரி மொழியில் பேச இயலாது” என குஷ்பு பதிவிட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல்தான் நான் சேரி எனக் கூறினேன். ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும்போது நான் ஏன் அதை கூறியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்? அதில் தவறில்லை. என்னை பொருத்தவரை எல்லா மக்களும் சமம்தான்; நான் எந்த மக்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. பிறகு நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘தீயசக்தி’ என்று தகாத வார்த்தைகளால் விமர்சித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் நான் கண்டனக் குரல் கொடுத்தேன்.

குஷ்பு
“குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”; சுட்டிக்காட்டிய காங்கிரஸ்

நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. தகாத வார்தைகளையும் நான் பேசவில்லை. மேலும் 60 வருடம் காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. ஆனால் ஏன் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வாங்கி கொடுக்கவில்லை?

நீட் தேர்விற்காக என்னை பார்த்து அறிவுப்பூர்வமான கேள்வி எழுப்பினார்களே!! காங்கிரஸின் ஆட்சி காலத்தில்தான் நீட் இருந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இங்கு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள ஒரு தாயார் ’குழந்தை இறந்துவிட்டது, 16 ஆம் நாள் காரியம் செய்ய வேண்டும். அவரை விட்டுவிடுங்கள்’ என்று கதறி அழுகிறார். இதற்கெல்லாம் குரல் கொடுக்க முடியவில்லை. ஆனால் நான் பேசினால் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துவிடுகின்றனர்” என்றார் காட்டமாக.

குஷ்புவின் முழு பேட்டியை, இங்கே காணலாம்:

முன்னதாக ஏற்கெனவே குஷ்பு, சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் ‘அன்பு’ என்று பொருள்படும் என்றும், தனக்கு அம்மொழி தெரியும் என்பதால் அதில் விளக்கம் கொடுத்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதையும் இன்றைய பிரஸ் மீட்டில் குறிப்பிட்டு, “எனக்கு தெரிந்த மொழியில் நான் பதில் கொடுத்தேன்” என்று பேசினார் குஷ்பு.

குஷ்பு
’சேரி’ வார்த்தைப் பதிவு: எதிர்ப்பு கிளம்பிய நிலையில் குஷ்பூ கொடுத்த அடடே விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com