“2026 சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி” - நடிகர் விஷால் உறுதி!

தனியாக புதிய கட்சி தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக திரைப்பட நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
விஷால்
விஷால்புதிய தலைமுறை

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வடபழனியில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். சாலை வசதி நன்றாக இருக்கிறது, விவசாயிகள் நலமுடன் உள்ளனர் என்றிருந்தால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். நிலைமை அப்படி இல்லை.

விஷால்
புது லுக்கில் விஜய்.. ரிலீஸ் தேதியை சொன்ன GOAT படக்குழு! போஸ்ட்டரில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

மேலும், 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்பிட்டுப் பார்க்க, அதிக நல்ல வேட்பாளர்கள் இருப்பார்கள். அதில் உதயநிதி, விஜய், விஷால் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பட்டியல் நீண்டதாக இருக்கும். முன்பு லயோலா மாணவர்கள் சினிமாவில் அதிகம் இருப்பனர். இப்போது அரசியலில் இருப்பர்.

விஜய், உதயநிதி ஸ்டாலின்
விஜய், உதயநிதி ஸ்டாலின்PT Web

தனிக்கட்சியா அல்லது ஏற்கனவே இருக்கும் கட்சிகளில் இணைகிறேனா என்பதையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நான் விஜயகாந்த் மாதிரி இல்லை. ஒரு வேளை எனக்கும் கல்யாண மண்டபம் இருந்திருந்தால், அதையும் இடித்து தள்ளியிருப்பார்கள்.

வரும் மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்குகளை செலுத்தாமல் தவற விட்டு பின்னர் வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com