வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தூத்துக்குடி புறப்பட்டார் நடிகர் விஜய்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிட தூத்துக்குடி புறப்பட்டார் நடிகர் விஜய்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிட நடிகர் விஜய் தற்போது தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. அதில் அம்மாவட்ட மக்கள் தங்களது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பல வகைகளில் உதவினர்.

நடிகர் விஜய்
“இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத பெயர்...” - பிரேமலதா விஜயகாந்த்

அந்தவகையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடியில் உள்ள 400 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இதற்காக தற்போது தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் விஜய்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com