“இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத பெயர்...” - பிரேமலதா விஜயகாந்த்

“இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத பெயர் நம் தலைவருக்கு கிடைத்துள்ளது” - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்புதிய தலைமுறை

விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்திய தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த்தின் கனவை நிறைவேற்றுவோம் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.

நேற்று விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரேமலதா பேசுகையில், “இதுவரையிலும் தமிழக அரசியல் வரலாற்றிலேயே எந்த அரசியல் தலைவர்களுக்கும் கிடைக்காத மிகப்பெரிய பெயர் இன்று தலைவருக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த 2 நாட்களில் கேப்டனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை என்பது 15 லட்சத்திற்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
🔴LIVE | RIP Vijayakanth |சென்று வாருங்கள் கேப்டன்! அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

இவ்வளவு மக்கள் கூட்டத்திற்கு காரணம் கேப்டன் செய்த தர்மமும், அவரின் நல்லெண்ணமும், அனைவருக்கும் உதவி செய்த அந்த குணமும்தான்... இன்று பூ தூவி அவரை சொர்க்கத்திற்கே அழைத்து செல்லக்கூடிய அளவிற்கு வாழ்த்திய அனைவருக்கும் என் இருகரம் கூப்பிய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கேப்டனின் கனவை நிறைவேற்றி வெற்றிக்கனியை அவரது பாதத்திற்கு சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிக-வின் உண்மையான வெற்றி நாள் என்பதை நாம் அனைவரும் உறுதி ஏற்போம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com