நடிகர் சூர்யா சாமி தரிசனம்pt desk
தமிழ்நாடு
பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்
பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் - கால பூஜையில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டார்.
செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு.
பழனி முருகன் கோயிலில் திரைப்பட நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலைஅடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்ற நடிகர் சூர்யா, காலை 9 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். சூர்யா நடிக்க உள்ள 45 வது திரைப்படத்தின் கதையை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சூர்யாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடிகர் சூர்யா கோயிலை வலம்வந்து வழிபட்டார். நடிகர் சூர்யா வந்ததை அறிந்த பக்தர்கள் ஆர்வமுடன் சூர்யாவை காண திரண்டனர். சூர்யாவின் ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.