"விஜயகாந்த் மாதிரி ஒருவரை இனி பார்க்கவே முடியாது"- நடிகர் சிங்கமுத்து

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் இவரின் மறைவுக்கு நடிகர் சிங்கமுத்து இரங்கல் தெரிவித்து, அவரோடு தனக்கு இருந்த மறக்கமுடியாத நினைவுகளையும் பதிவு செய்துள்ளார்.

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரின் மறைவுக்கு நடிகர் சிங்கமுத்து இரங்கல் தெரிவித்து, அவரோடு தனக்கு இருந்த மறக்கமுடியாத நினைவுகளையும் பதிவு செய்துள்ளார்.

விஜயகாந்த் உடனான நினைவுகளை நம்மோடு பகிர்ந்த சிங்கமுத்து, “விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்பட உலகில் ஒரு இதயம் போன்றவர். அதாவது உண்மையான இதயம் கொண்ட மனிதர்.

நடிகர் சிங்கமுத்து
🔴LIVE | RIP Vijayakanth | தேமுதிக அலுவலககத்தில் விஜயகாந்த் உடல்... கண்ணீர் கடலில் கோயம்பேடு!

ஏழை எளிய மக்கள், இயக்குநர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அரவணைத்தவர். அருமையான தர்ம குணம் படைத்தவர். எப்பொழுதும் மற்றவர்களுடைய மனது புண்படும் வகையில் எதையும் கூறமாட்டார். ஆறுதல்தான் கூறுவார். எதிர்காலத்திற்கு உண்டான வழியையும் காட்டுவார். இதுபோன்ற மனிதர்கள் பிறப்பது அரிது. அவர் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்” என்று உருக்கமாக கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com