நடிகர் சித்து தனது மனைவி ஸ்ரேயாவுடன் சாமி தரிசனம்pt desk
தமிழ்நாடு
தி.மலை | அண்ணாமலையார் திருக்கோயிலில் நடிகர் சித்து தனது மனைவி ஸ்ரேயாவுடன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடிகர் சித்து தனது மனைவி ஸ்ரேயாவுடன் சாமி தரிசனம் செய்தார்.
செய்தியாளர்: மா.மகேஷ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடிகர் சித்து தனது மனைவி ஸ்ரேயாவுடன் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சம்பந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டார்.
அடுத்த முதல்வர் யார்? சி-ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்! விஜய்-க்கு இவ்ளோ வாய்ப்பா?
இதையடுத்து வெளியே வந்த ஸ்ரேயா மற்றும் சித்து உடன் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து திருக்கோயில் சார்பாக அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.