நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி
நடிகர் ரவி மோகன் - ஆர்த்திpt desk

விவகாரத்து கோரிய வழக்கு | நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

விவகாரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.
Published on

செய்தியாளர் V.M.சுப்பையா

தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.

ரவி - ஆர்த்தி
ரவி - ஆர்த்திகோப்புப்படம்

அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடிகர் ரவி மோகன் விவகாரத்து கோரிய வழக்கு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து கேட்பதற்கான காரணங்களுடன் கூடிய மனுவை நடிகர் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி
யூடியூபர் ஜோதியின் டைரியை கைப்பற்றிய காவல்துறை - வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆர்த்தி தரப்பில், ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com