"என் வாழ்க்கையை தொடங்கி வைத்தவரே விஜயகாந்த்தான்.." - நடிகர் பார்த்திபன் உருக்கம்

“எல்லாருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருந்து கொண்டுதான் இருக்கிறார்” - மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு நடிகர் பார்த்திபன் இரங்கல்.
நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்புதிய தலைமுறை

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் மறைந்தார். கண்ணீரோடு ‘ஒரு முறையாவது அவரது முகத்தினை பார்த்துவிட வேண்டும்’ என்று கூட்டம் கூட்டமாக அவர் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு விரைந்து வந்து கொண்டிருக்கிறது மக்கள் கூட்டம். அவர் மரணித்த நொடியில் இருந்து தற்போதுவரை அவரை காண மக்கள் கூட்டம் வெள்ளம்போல பெருக்கெடுத்து வருகிறது.

நடிகர் பார்த்திபன்
🔴LIVE | RIP Vijayakanth | “நல்ல நண்பருக்கு விடைகொடுத்து செல்கிறேன்” - கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், அருண் பாண்டியன், விஜயகுமார், ராம்கி, ராமராஜன், இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று திரையுலகம் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விஜயகாந்த்துக்கு தங்களது இரங்கலை பதிவு செய்துவருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் பார்த்திபன் தனது இரங்கலை இன்று பதிவு செய்துள்ளார். விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செய்த பார்த்திபன், பின் செய்தியாளர்களிடையே பேசுகையில், “மரணம் என்பது அனைவருக்கும் நேரிடும். ஆனால் அது இப்படிதான் நேரிட வேண்டும். அதாவது ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்ற அடையாளம் நிறைந்ததாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்கள் மாறுபடுவார்கள். ஆனால் இவரின் ரசிகர் இவரின் மனிதாபிமானத்திற்கு மட்டுமே அடிமைகளாக இருப்பார்கள்.

நடிகர் பார்த்திபன்
RIP Vijayakanth | “காலன் கொடியவன் என்றுதான் சொல்லவேண்டும்” - பாரிவேந்தர் MP

அந்த வகையில் நானும் இவருக்கு தீவிர ரசிகன். இவரை அடக்கம் செய்வது நமது இதயத்திற்குள்தான். உடல் அளவில் பிரிந்து நம் மனதிற்குள் வரப்போகிறார்.

என் வாழ்க்கையை துவங்கி வைத்த மனிதரும் இவர்தான். இப்படி எல்லாருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு இடத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்” என்று கண்கலங்க பேசினார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com