தமிழ்நாடு
Remembering Vijayakanth | “நடிகர் சங்க கடனை அடைத்தவர் விஜயகாந்த்” - நடிகர் அப்புகுட்டி
"புரட்சி செய்து சினிமாவில் வெற்றிபெற்றவர். கருப்பு நிலா, கள்ளழகர் போன்ற பல படங்களில் அவரோடு நடித்துள்ளேன். உதவி என்றால் தலைவரை தவிற வேறு யாரையும் நான் பார்த்ததில்லை" நடிகர் அப்புகுட்டி
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட நடிகர் அப்புகுட்டி தன் இரங்கலை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அதில் அவர் “புரட்சி செய்து சினிமாவில் வெற்றிபெற்றவர் கேப்டன். கருப்புநிலா, கள்ளழகர் போன்ற பல படங்களில் அவரோடு நடித்துள்ளேன். உதவி என்றால் தலைவரை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. நடிகர் சங்க கடனை அவர்தான் அடைத்தார். இப்படி பல நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்தவர்” என்றார்.