சென்னையில் மொத்தமாக 775 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் 685 பதற்றமான வாக்கு சாவடிகள், 23 மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள், 67 மிக மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 775 வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
vote
vote pt

- அன்பரசன், க்ரைம் செய்தி நிரூபர்

நாளை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் பதற்றமான, மிக பதற்றமான, மிகமிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிறப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வடசென்னை ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 3,756 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் பதற்றமான, மிகப்பதற்றமான மற்றும் மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் 3 தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில், 685 பதற்றமான வாக்கு சாவடிகள், 23 மிகப்பதற்றமான வாக்கு சாவடிகள், 67 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் என மொத்தம் 775 வாக்குச்சாவடிகள் கண்டறியபட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடசென்னை

ராதாகிருஷ்ணன் நகர்:

➤ 4 பதற்றமான வாக்குச்சாவடி

➤ 5 மிக பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ 6 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள்

பெரம்பூர்

➤ 83 பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ 12 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள்

கொளத்தூர்

➤ 64 பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ 3 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ திருவிக நகரில் 18 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் ராயபுரத்தில் 50 பதற்றமான வாக்கு சாவடி என மொத்தம் வட சென்னையில் 219 பதற்றமான வாக்குச்சாவடிகள், 23 மிக பதற்றமான வாக்கு சாவடிகள், 3 மிக மிக பதற்றமான வாக்கு சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென் சென்னை

விருகம்பாக்கம்

➤ 99 பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ 11 மிக மிக பதற்றமான வாக்குச் சாவடிகள்

சைதாப்பேட்டை

➤ 14 பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ 9 மிக மிக பதற்றமான வாக்கு சாவடிகள்

தி.நகர்

➤ 34 பதற்றமான வாக்குச்சாவடிகள்

➤ 12 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள்

மயிலாப்பூர்

➤ 25 பதற்றமான வாக்கு சாவடிகள்

➤ 16 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள்

வேளச்சேரியில் 5 பதற்றமான வாக்கு சாவடிகள், 16 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் என தென் சென்னையில் 177 பதற்றமான வாக்குச்சாவடிகள், 64 மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை

வில்லிவாக்கத்தில் 20 பதற்றமான வாக்குச்சாவடிகள், எழும்பூரில் 43 பதற்றமான வாக்குச்சாவடிகள், துறைமுகத்தில் 66 பதற்றமான வாக்குச்சாவடிகள், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 53 பதற்றமான வாக்குச்சாவடிகள், ஆயிரம் விளக்கில் 47 பதற்றமான வாக்குச்சாவடிகள், அண்ணா நகரில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகள் என மத்திய சென்னையில் 289 பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com