சுடப்போகும் ஆவின் ஐஸ்க்ரீம்கள் விலை! 4 வகைகளுக்கு ரூ.5 வரை விலையேற்றம்.. இன்று முதல் அமல்

ஆவின் நிறுவனத்தின் 4 வகை ஐஸ்கிரீம்களுக்கு 5 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்கிரீம் விலை - ஆவின்
ஐஸ்கிரீம் விலை - ஆவின்முகநூல்

செய்தியாளர்: சுகன்யா

ஆவின் நிறுவனத்தின் 4 வகை ஐஸ் கிரீம்களுக்கு 5 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் பால் மற்றும் பால் பொருட்கள் தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்து வருகிறது ஆவின் நிறுவனம். ஐஸ்கிரீம்களில் மட்டுமே இதுவரை 38 வகைகளை வெவ்வேறு அளவு, நிறம், சுவை, வடிவங்களில் ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. பெரு நகரங்களில் சராசரியாக ஆவின் நிறுவனத்தின் ஒவ்வொரு விற்பனையகங்களிலும் தலா 20,000 ரூபாய் வரை ஒரு நாளைக்கு விற்பனை நடைபெறுவதாகவும், இதில் சுமார் 25 முதல் 30% வரை ஐஸ்கிரீம்களின் விற்பனை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக 50 மில்லி எடை கொண்ட வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, மேங்கோ ஆகிய கப் ஐஸ்கிரீம்கள் தலா 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. பவுல் என்ற வகை ஐஸ்கிரீம்கள் 250 மில்லி 70 ரூபாயில் தொடங்கி 1000 மில்லி 180 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

ஐஸ்கிரீம் விலை - ஆவின்
ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் - புதிய ஆய்வு சொல்வது என்ன?

கோடை காலத்தையொட்டி பலரும் ஐஸ்க்ரீம் சாப்பிட ஆர்வம் காட்டுவது வழக்கம். இந்நிலையில், 4 வகை ஐஸ்க்ரீம்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • 65 மில்லி அளவு கொண்ட சாக்கோபாரின் விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளது.

  • BALL வெண்ணிலா ஐஸ் கிரீமின் 125 மில்லி 28 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இனி 30 ரூபாயாக அதிகரித்துள்ளது.

  • இதேபோல், 100 மில்லி கிளாசிக் கோன் வெண்ணிலா ஐஸ் க்ரீம் 5 ரூபாய் விலை அதிகரித்து 35 ரூபாயாக அதிகரித்துள்ளது

  • இதேபோல், 100 மில்லி கிளாசிக் கோன் சாக்லேட் ஐஸ்கிரீமும் இனி 35 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோடைகாலத்தில் ஆவின் நிறுவன ஐஸ்கிரீம் வகைகள் விலை உயர்த்தப்பட்டிருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com