ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் - புதிய ஆய்வு சொல்வது என்ன?

பெரியவர்களிடையே உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக 'தி லான்செட்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
தி லான்செட்
தி லான்செட்ஃபேஸ்புக்

பெரியவர்களிடையே உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக ’தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆய்வின் விவரம்

உலகில், உள்ள 190 நாடுகளில் உள்ள 220 மில்லியனுக்கும் அதிகமானவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களிடமிருந்து அவர்களின் உயரம், உடல் எடை ஆகியவை கணக்கிடப்பட்டது.

1500 ஆய்வாளர்களைகொண்டு மேற்கொள்ளப்பட இந்த ஆய்வில், திடுக்கிடம் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும் பங்கேற்றுள்ளது.

விவரம்

இதன்படி, உடல் பருமன் என்பது குறிப்பாக ஏழை நாடுகளையும், குழந்தைகள், இளம் வயதினரிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது.

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே பெரியவர்களிடையே உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி லான்செட்
பாராசிட்டமால் அதிகம் எடுத்துகொள்வது ஆபத்து - ஏன் தெரியுமா? மருத்துவர் விளக்கம்

1990 - 2022

1990-ஆம் ஆண்டில் பருமனானவர்களின் எண்ணிக்கை என்பது சுமார் 226 மில்லியனாக இருந்தது. ஆனால் 2022-ல், 1038 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 1990-ல் ஆண்களின் உடல்பருமன் விகிதம் என்பது 0.5% இருந்தது. அதுவே 2022-ல் 5.4% என்று அதிகரித்துள்ளது. பெண்களில் 1990-ல் 1.2% என்பது 2022-ல் 9.8% சதவீதம் என்றும் அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது குறித்து கூறுகையில், "இந்த புதிய ஆய்வு ஆரம்பகால வாழ்க்கை முதல் முதிர்வயது வரை, உணவு, உடல் செயல்பாடு மற்றும் தேவைக்கேற்ப போதுமான கவனிப்பு மூலம் உடல் பருமனைத் தடுப்பது மற்றும் நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com