\
AAVIN RATE HIKE
ஆவின் நிறுவன பொருட்கள்aavin.tn.gov.in

அமலுக்கு வரும் ஆவின் விலை உயர்வு.. எந்தெந்த பொருட்கள் எவ்வளவு உயர்வு.? முழு விவரம்!

ஆவின் பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில், என்னென்ன பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்திருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
Published on: 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனத்தின் பொருட்கள் மீது விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பண்டிகைக்காலம் நெருங்கி வரும் சூழலில், இந்த திருத்தப்பட்ட விலைப் பட்டியல் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி நெய், வெண்ணெயில் தொடங்கி, ஆவின் இனிப்பு பொருட்களான குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா, மைசூர்பாக், மில்க் கேக், முந்திரி கத்லி, முந்திரி பிஸ்தா ரோல் உள்ளிட்டவற்றின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

நெய் விலையைப் பொருத்தவரை, ரூ.85 ஆக இருந்த 100 மி.லி. ஜாரின் விலை ரூ,95 ஆகவும், 200 மி.லி. ஜாரின் விலை ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், 500 மி.லி. ஜாரின் விலை ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ஜாரின் விலை ரூ.700-ல் இருந்து ரூ.780 ஆகவும், 5 லிட்டர் ஜாரின் விலை ரூ.3,600-ல் இருந்து ரூ.4,000 ஆகவும், 15 கிலோ நெய் டின் விலை ரூ,11,880-ல் இருந்து ரூ.13,000 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

AAVIN RATE HIKE
ஆவின் aavin.tn.gov.in

வெண்ணெய் விலையும் இதே போல அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.60 ஆக இருந்த 100 கிராம் வெண்ணெய் விலை ரூ.70 ஆகவும், ரூ.275 ஆக இருந்த 500 கிராம் வெண்ணெய் டப்பாவின் விலை ரூ.320 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இனிப்பு வகைகளைப் பொருத்தவரை, ரூ.140 ஆக இருந்த 250 கிராம் மைசூர்பாக்கின் விலை ரூ.160 ஆகவும், ரூ.270 ஆக இருந்த 500 கிராம் டப்பா ரூ.310 ஆகவும் உயர்ந்திருக்கிறது. 250 கிராம் முந்திரி கத்லி ரூ.260-ல் இருந்து ரூ.280 ஆகவும், 250 கிராம் முந்திரி பிஸ்தா ரோல் ரூ.320-ல் இருந்து ரூ.340 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

200 மில்லி லிட்டர் மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், மாவின் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் மோரின் விலை ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 கிராம் சாதாரண தயிர் ரூ.18-ல் இருந்து ரூ.21 ஆகவும், 500 மில்லி லிட்டர் தயிரின் விலை ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும், ஒரு கிலோ பிரீமியம் தயிரின் விலை ரூ.120-ல் இருந்து ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

லஸ்ஸி, யோகர்ட், பால் பேடா, ஆவின் மிக்சர், பட்டர் முறுக்கு, குக்கீஸ் மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 200 கிராம் ஆவின் மிக்சர் ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், 200 கிராம் பட்டர் முறுக்கு ரூ.80-ல் இருந்து ரூ.95 ஆகவும், 80 கிராம் குக்கீஸ் வகைகள் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

AAVIN RATE HIKE
ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. நாளை முதல் அமல்.. நிர்வாகம் அளித்த விளக்கம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com