நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா
நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனாமுகநூல்

தவெகவில் இணைந்த நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா!

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு முன்னாள் இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.
Published on

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு முன்னாள் இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.

முன்னதாக இன்று காலையில், தவெக கட்சியின் பனையூர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும், அதிமுக ஐடி பிரிவின் முன்னாள் இணை செயலாளர் நிர்மல் குமாரும் அடுத்தடுத்து சென்றிருந்தனர்.

ஏற்கெனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் இரண்டு கட்ட பட்டியல் வெளியான நிலையில் இன்று மூன்றாம் கட்ட பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தவெக கட்சி அலுவலகத்தில் ஏராளமான நிர்வாகிகள் குவிந்திருந்தனர். அந்தநேரத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் வந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

இவர்கள் இருவரையும் தொடர்ந்து பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய்யும் வருகை தந்தார். பின்னர் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் தவெகவில் இணைந்தனர்.

நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா
பெரியாரை அவமதிப்பவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

மேலும் இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் கட்சிக்கு 3 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்படுவதாகவும், கொள்கை பரப்புச் செயலர், கொள்கை பரப்பு இணைச்செயலர் பொறுப்புகளுக்கும் நியமனம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு தவெகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com