\
ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனாபுதிய தலைமுறை

EXCLUSIVE | விசிக-வில் துணைப் பொதுச்செயலாளர் பதவி... ஆதவ் அர்ஜுனா சொல்வதென்ன?

விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நேற்று பொறுப்பேற்றுள்ளார்.
Published on

விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா பொறுப்பேற்றுள்ள நிலையில், அதுகுறித்து அவர் நம்மிடையே பேசினார். அந்தப் பேட்டியின் விவரத்தை, இங்கே காணலாம்:

‘துணைப் பொதுச்செயாளர் பொறுப்புக்கு முன் கட்சியில்...’

“2016லிருந்து விடுதலை கட்சியின் தலைவருடன் (திருமாவளவன்) பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன். 2016, 2019, 2021 இந்த தேர்தல் சமயத்தில் அவருடன் இணைந்து தேர்தல் திட்டத்தை வகுத்துள்ளேன். திருமாவளவன் அவர்கள் 2016ல் பூத் செட் செய்வதற்கான பொறுப்பை என்னிடம் தந்தார். தொடர்ந்து கட்சியை மறுசீரமைப்பு செய்யும் பணியையும் என்னிடம் தலைவர் கொடுத்தார். இதையடுத்து இந்தப் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது”

ஆதவ் அர்ஜுனா
விசிக-வின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் - யார் இவர்? பின்னணி என்ன?

“நீங்கள் விடுதலை சிறுத்தை கட்சியினை தேர்வு செய்தது ஏன்?”

“அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியை இங்கிருக்கும் மக்களுக்கு ஆற்ற நினைத்தேன். அதற்காக தேர்தல் பணியினை கற்றுக்கொண்ட பிறகுதான் விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்ந்தேன். இங்கிருக்கும் தலித் சமூகமாகட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகட்டும் அவர்கள் பெரும்பாலும் வறுமையில் இருக்கின்றனர். ஆகையால் வறுமை இருக்கும் இடங்களிலும், பிறப்பால் ஏற்றத்தாழ்வு பிரச்னைகள் இருக்கும் இடங்களிலும் நான் வேலை செய்யநினைத்து கட்சியில் பங்காற்றுகிறேன்” என்றார்.

மேலும் அவர் நம்முடன் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com