இன்ஸ்டாவில் ஏற்பட்ட பழக்கம்.. ஆந்திரா இளைஞரை திருமணம் முடித்த திண்டிவனம் சிறுமி! பெற்றோர் அதிர்ச்சி
செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனதால் பெற்றோர்கள் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகார் குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்த போது சிறுமியின் செல்போனை எண்னை ஆய்வு செய்தனர். அதில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.
அந்த சிறுமி இளைஞரை திருமணமும் செய்துள்ளர். அந்த இளைஞர் யாரென விசாரித்தில், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் (18) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், இளைஞர் கார்த்திக் குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது