\
கனமழையால் இளைஞர் உயிரிழப்பு
கனமழையால் இளைஞர் உயிரிழப்புfile photo

தமிழகத்தில் கனமழை.. இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Published on: 
Summary

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கத்தில் 24 வயது மதன்குமார் உயிரிழந்தார். ஆடுகளை பாதுகாக்க முயன்றபோது ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று மதியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மதன்குமார் (24), தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், அவரது ஆடுகள் வீட்டின் அருகேயுள்ள சாலையில் மேய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கனமழை
கனமழைfile photo

மழையில் நனைந்து கொண்டிருந்த ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மதன்குமார் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இடி மின்னல் அவரைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் இளைஞர் உயிரிழப்பு
உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 19 மாவட்டங்களில் கனமழை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com