உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 19 மாவட்டங்களில் கனமழை!
தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதால், 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டியதால், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று முதல் 23ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது.
இதன்காரணமாகவே இன்று இரவு சென்னை மற்றும் அதனைசுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டித்தீர்த்துள்ளது. அதன் தாக்கமாக இன்று வடகடலோரம், தென் கடலோரத்தில் கன முதல் மிககனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பும், முற்பகலில் உள் மாவட்டங்களிலும் மழை துவங்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
இந்தசூழலில் தான் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு. திருப்பூர், நாமக்கல். கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி. மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம். மயிலாடுதுறை. புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம் ஆசிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாம் காலை 10 மணிவரை 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

