மதுரையில் ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து; 8 பேர் உயிரிழப்பு

மதுரையில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டியில் மளமளவென பரவிய தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் இருந்து வழிபாட்டிற்காக 60 க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்வண்டி மூலமாக வந்துள்ளனர். லக்னோ ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் ரயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சிக்கி 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தீ அணைப்புக் குழுவினரும் அப்பகுதியில் குவிந்துள்ளனர். பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைப்பதற்காக சிலிண்டர் கொண்டுவந்துள்ளார்கள். சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மீட்புப் பணிகளிலின் மூலம் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இன்னும் ரயில் பெட்டிகளில் பயணிகள் கொண்டு வந்துள்ள சிலிண்டர் அதிகளவில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ அடுத்தடுத்த பெட்டிகளில் பரவி விடாமல் தடுப்பதற்கு முழுமையாக போராடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com