சீற்றத்துடன் காணப்படும் மாமல்லபுரம் கடல்pt desk
தமிழ்நாடு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றத்துடன் காணப்படும் மாமல்லபுரம் கடல்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், நான்காவது நாளாக மாமல்லபுரம் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
செய்தியாளர்: உதயகுமார்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்pt desk
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடல் நான்காவது நாளாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.