model image
model imagePT web

Google Map-ஐப் பயன்படுத்தி போக்குவரத்து போலீசாரிடமிருந்து தப்பிக்கும் சென்னை வாகன ஓட்டிகள்!

சென்னையில் போக்குவரத்து போலீசார் இருக்கும் இடத்தை எல்லாம் Google Map Locations காட்டும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருபவர்கள் தப்பித்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
Published on

"Where there is a will, there is a way" என்ற பழமொழியை சற்று மாற்றி போலீசாரிடம் தப்பிக்கும் "Where there is a CoP, there is Location tag" என்ற புது மொழியை கண்டறிந்துள்ளனர் சென்னை வாகன ஓட்டிகள். சென்னையில் போக்குவரத்து போலீசார் இருக்கும் இடத்தை எல்லாம் Google Map Locations காட்டும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருபவர்கள் தப்பித்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. புதிய போக்குவரத்து அபராதங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் மது அருந்தி ஓட்டினால் 10,000 ரூபாய் வரை அபராதங்கள் என்பது போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்பது பைக் ஓட்டுபவர்களுக்கும் பின்னால் இருந்து அமர்பவர்களுக்கும் என தனித்தனியாக போடும் வகையில் போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த அபராதங்களில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிப்பதற்காக புதிய யுத்தியை கூகுள் மேப்பில் கையாண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Google Map - ல் ஒரு இடத்தை லொகேஷன் டேக் செய்து பெயர் வைத்தால், அந்த இடத்தை கூகுள் மேப்பில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அதை அறிந்து கொள்ளலாம்.

model image
சென்னை | கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகன விபத்து – பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

இந்த தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, போக்குவரத்து போலீசார் இருக்கும் இடங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து தப்பித்துச் செல்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழில் மற்றும் சென்னை தமிழில் போலீஸ் இருக்கும் இடங்களை நூதனமாக வாகன ஓட்டிகள் அறியும் வகையில் லொகேஷன் டேக் செய்து தப்பித்து வருவது தெரியவந்துள்ளது. போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க(Police Iruppanga Helmet Podunga), சிக்கோம் மாமே(ChIkkom mame), தாடி சிக்கோம்(Thadi chikkom), போலீஸ் சிக்கோம்( police chikkom) போன்ற பல கோடுவேர்டுகளை பயன்படுத்தி சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசாரின் சோதனைகளில் இருந்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தப்பிப்பதற்காக கூகுள் மேப்பில் லொகேஷன் டேக் செய்துள்ளனர்.

வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து கிளம்புபவர்கள் கூகுள் மேப்பில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி தாங்கள் செல்லும் வழியில் போலீஸ் இருக்கிறார்களா? என தெரிந்து கொண்டு செல்வது அதிகமாவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பீக் ஹவர்ஸ் நேரங்களில் வாகன ஓட்டிகள் அனைத்து விதமான ஆவணங்களும் இருந்தாலும் போக்குவரத்து போலீசார் சோதனையின் போது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து தப்பி செல்வதற்காகவும் இந்த google மேப்பை பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

model image
சென்னை: சீரமைக்கப்படாத சாலைகள்... சிக்கித் திணறும் வாகன ஓட்டிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உதாரணமாக, 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்ற டேக்லைனுக்கு மட்டும் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, ஆழ்வார்பேட்டை சன் ஆஃப் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, ராமாபுரம் ஆசார் கானா தெரு, திருத்தணி நகர் ஓல்டு பல்லாவரம், வேளச்சேரி சாலை, மூப்பாரப்பன் தெரு சி.ஐ.டி நகர், தியாகராய நகர், பர்கித் ரோடு ஆகிய இடங்களில் போலீஸ் இருப்பதை குறிக்கும் வகையில் கூகுள் மேப்பில் லொகேஷன் டாக்ஸ் செய்துள்ளனர். இது போன்று பல வார்த்தைகளை பயன்படுத்தி போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்க நூதன முறையில் கூகுள் மேப்பை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இந்த லொகேஷன் டேக் என்பது வாகன ஓட்டிகள் தினமும் போலீஸ் சோதனை செய்யும் இடத்தை தெரிந்து கொண்டு Google Map - ல் அப்டேட் செய்து வருகின்றனர். இதனால், போலீசார் வேறு இடத்தில் சோதனைகளை மேற்கொண்டாலும் அங்கிருந்தும் தப்பிக்கும் வகையில் தினமும் கூகுளில் லொகேஷன் டேக் செய்வதாக கூறப்படுகிறது. இது போன்ற ஐடியாக்கள் அமெரிக்கா நியூயார்க் போன்ற நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்து, தற்போது பெங்களூரு நகரங்களிலும் வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில், சென்னையிலும் கூகுள் மேப்பை பயன்படுத்தி போக்குவரத்து போலீசாரிடமிருந்து தப்பிச் செல்கின்றனர் உஷார் வாகன ஓட்டிகள்.

model image
சென்னை | சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com