சரண்ராஜ்
சரண்ராஜ்pt desk

சென்னை | கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகன விபத்து – பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஆவடியில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர், பணி நிமித்தமாக தினந்தோறும் ஆவடி வழியாக அம்பத்தூருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று பணி நிமித்தமாக பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வீராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

Death
DeathFile Photo

அப்போது திடீரென அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கீழே சாலையில் விழுந்து சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சரண்ராஜ்
விழுப்புரம் | மின் மோட்டரை இயக்கிய மாணவி மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

இதையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் போலீசார் உதவியுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com