\
சென்னையில் இன்று 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னையில் இன்று 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னையில் இன்று 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
Published on

சென்னையில் இன்று 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கொரோனா 3 வது பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பொங்கல் பண்டிகை ஒட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இன்று மீண்டும் காலை 8 மணி முதல் சென்னையில் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சென்னையில் 1600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இதில் பொதுமக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

இன்று இரவு 7 மணி நடக்கும் முகாமில் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கோவிஷூல்ட், கோவாக்சின் இரண்டு தடுப்பூசியும் கையிருப்பில் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 1 லட்சம் தடுப்பூசி இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com