குடிசை வீட்டிலிருந்து ஒரு நீதிபதி.. அரசு பள்ளி, கல்லூரிகளில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகள் சாதனை!

திருவாரூரில் அரசுப் பள்ளியில் படித்து நீதிபதியாக தேர்வாகியுள்ள கூலித் தொழிலாளியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நீதிபதியாக தேர்வான சுதா
நீதிபதியாக தேர்வான சுதாபுதிய தலைமுறை

செய்தியாளர் - மாதவன் குருநாதன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன் - சந்திரா தம்பதியர். கூலித் தொழிலாளியான கணேசனின் மூன்றாவது மகள் சுதா, ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ளார்.

நீதிபதியாக தேர்வான சுதாவின் வீடு
நீதிபதியாக தேர்வான சுதாவின் வீடு

இதையடுத்து திருவாரூர் திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு திருநெல்வேலியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அவருடைய படிப்பு மற்றும் கல்வி நிலையை அறிந்த திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள், அவரை நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூறியுள்ளனர்.

நீதிபதியாக தேர்வான சுதா
நீதிபதியாக தேர்வான சுதா

அதன்படி அவர் தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வுக்கான முதல்நிலை தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வுகளிலும் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்டத்திலேயே சுதா மட்டும் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

நீதிபதியாக தேர்வான சுதா
தூத்துக்குடி | சிவில் நீதிபதியானார் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட விஏஓ-வின் மகன்!

குடிசையில் வாழ்ந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் அரசு கல்வி நிலையங்கள் மூலம் கல்வி பெற்று உயர்ந்து நீதிபதி பதவிக்கு சென்றுள்ள சுதாவுக்கு, அவரது சொந்த கிராம மக்கள் ப்ளக்ஸ், பேனர் வைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல், அவர் இந்த நிலைக்கு உயர காரணமாக இருந்த திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தினரும், நீதிபதிகளும் சுதாவை வெகுவாக பாராட்டினர்.

நீதிபதியாக தேர்வான சுதாவின் பெற்றோர்
நீதிபதியாக தேர்வான சுதாவின் பெற்றோர்

இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நீதிபதிகள், சுதாவை பாராட்டி கௌரவப்படுத்தினர். அப்போது பேசிய சுதா...

“நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஏழை மாணவியான நான், முதல்நிலை தேர்வெழுதி வெற்றி பெற்ற பிறகு அடுத்த நான்கு மாதங்களிலேயே இரண்டாம் நிலை தேர்வெழுதி அதன் பிறகு நேர்முகத் தேர்வு சென்று நீதிபதியாகியுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு பயிற்சி கொடுத்த நீதிபதிகள் மற்றும் தொடர்ந்து படிக்க உதவிகள் செய்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்தான் எனது வெற்றிக்கு காரணம்.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, பணம் இருந்தால்தான் அடுத்து தேர்வெழுதி வெற்றி பெற்று நீதிபதி ஆகலாம் என்றும், நிறைய ஆண்டுகள் படிக்க வேண்டும் என்றும் பலவிதமாக என்னை பலரும் தளர்வடையச் செய்ய நினைத்தார்கள்.

நீதிபதியாக தேர்வான சுதா
நீதிபதியாக தேர்வான சுதா

ஆனால், என்னுடைய வழக்கறிஞரும், நீதிமன்ற வளாக நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளும் எனக்கு கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான்கே மாதங்களில் இரண்டாம் நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இன்று நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com