\
நடை பயணம் சென்ற சமண துறவிகள் மீது மோதிய லாரி - பெண் துறவி பலி

நடை பயணம் சென்ற சமண துறவிகள் மீது மோதிய லாரி - பெண் துறவி பலி

நடை பயணம் சென்ற சமண துறவிகள் மீது மோதிய லாரி - பெண் துறவி பலி
Published on

நாங்குநேரி அருகே சமண துறவிகள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் துறவி பரிதாபமாக உயிரிழந்தார். .

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 7 கொண்ட சமண துறவியர் குழுவினர் ஒரு ஆம்னி வேனில் தங்களது பொருட்களை வைத்துக் கொண்டு நடை பயணமாக பல்வேறு கோயில்களுக்குச் சென்று விட்டு கன்னியாகுமரிக்கு நடந்து சென்றனர். இந்நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி துறவியர் மீது மோதியது.

இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தீன்தயாள் உள்ளிட்ட மூவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, ருசிலாஸ்ரீஜி என்ற பெண் துறவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பாரைக்கோடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜான் சுந்தர் சிங் என்பவரை கைது செய் நாங்குநேரி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com