”எம்.ஆர்.பி. விலைக்கு வேணும்னா கரெக்டா சில்லறைய கொடு” டாஸ்மாக் ஊழியர் மிரட்டல் பேச்சு! வீடியோ!

டாஸ்மாக் மதுக்கடைக்கு வந்த வாடிக்கையாளரை கடை ஊழியர் மிரட்டும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி நசரத்பேட்டையில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த நபர், 200 ரூபாய் கொடுத்து எம்.ஆர்.பி. விலைக்கு மதுபானம் கேட்டதற்கு, சரியான சில்லரையைக் கொடுத்தால்தான் எம்.ஆர்.பி. விலைக்கு கொடுக்க முடியும் என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். இது தொடர்பான அந்த வீடியோவில், வாடிக்கையாளர் ஒருவர், 200 ரூபாய் பணத்தை நீட்டி, எம்.ஆர்.பி. விலைக்கு சரக்கு கேட்கிறார். ஆனால், விற்பனையாளரோ ’சரியாக ரூ.130 கொடுத்தால்தான் எம்.ஆர்.பி. விலைக்கு சரக்கு கொடுக்க முடியும்’ என மிரட்டுகிறார்.

இதுதொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com