சூலூரில் ஜனநாயக கடமையாற்றிய 103 வயது மூதாட்டி

சூலூரில் ஜனநாயக கடமையாற்றிய 103 வயது மூதாட்டி
சூலூரில் ஜனநாயக கடமையாற்றிய 103 வயது மூதாட்டி

வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படும் காலக்கட்டத்தில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 103 வயதை தாண்டிய மூதட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 17 வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய  4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.மேலும் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுடன் 5 மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குபதிவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் 103 வயது மூதட்டி தனது வாக்கை பதிவு செய்துள்ளார். சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 103 வயதை தாண்டிய மூதட்டி துளசி அம்மாள் தனது வாக்கினை பதிவு செய்து இருக்கிறார். வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படும் காலக்கட்டத்தில், தனது வயதையும் பொருட்படுத்தாமல் தனது 103 ஆம் வயதில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்த மூதாட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com