வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்web

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்| ’நீக்கப்பட்டதே அவர்களுக்கு தெரியாது..’ வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள 88 விழுக்காடு வாக்காளர்களுக்கு அது குறித்த தகவலே தெரிவிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Published on
Summary

தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 88% வாக்காளர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் இருப்பது போன்ற காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலருக்கு தங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதே தெரியாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 88 விழுக்காட்டினருக்கு எந்த முன்னறிவிப்பையும் தேர்தல்ஆணையம் வழங்கவில்லை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஐ.ஆர் படிவங்கள் சமர்ப்பிக்க 14ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு
எஸ்.ஐ.ஆர் படிவங்கள் சமர்ப்பிக்க 14ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு web

எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கு விசாரணையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல்
சென்னை | எஸ்ஐஆர் பணியில் தொடரும் குளறுபடி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்ததாக நீக்கம்!

ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் இருப்பது போன்ற 'தர்க்க ரீதியான முரண்பாடுகளை' அடிப்படையாகக் கொண்டு இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி 30 ஆம் தேதியுடன் பெயர் நீக்கத்துடன்தொடர்பான ஆட்சேபணைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைகிறது.

இந்நிலையில் பலலட்சம் வாக்காளர்களுக்கு தங்கள்பெயர் நீக்கப்பட்டுள்ளதே தெரியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கு வங்க எஸ் ஐ ஆர் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கும் ஏன் நீட்டிக்கப்படக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

மேற்கு வங்கத்தில் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனவரி 19 அன்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி 'தர்க்கரீதியானமுரண்பாடுகள்' அடிப்படையில் நீக்கப்பட்ட சுமார் 1.36 கோடிவாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல்ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றவும், அவற்றை கிராமபஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள் மற்றும் வார்டுஅலுவலகங்களில் அனைவரும் பார்க்கும்வகையில் ஒட்டிவைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் நேரில் ஆஜராகியோ தங்கள் பிரதிநிதி மூலமாகவோ ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம். பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்ய கூடுதல் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதே நடைமுறையை தமிழ்நாட்டுக்கும் பின்பற்ற முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல்
நாளை கடைசிநாள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் கவனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com