நெல்லை - கடந்த 3 நாட்களில் 91 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது!

பெருமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் 91 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Birth
Birthpt desk

நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கருவுற்ற தாய்மார்கள் பாதிக்காத வண்ணம் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் 696 கருவுற்ற தாய்மார்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

Birth
Birthfile

அவர்களில் சிக்கல் நிறைந்த 24 பேர் மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும், நெல்லை மாவட்டம் முழுவதும் 142 பேர் மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என்றும் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Birth
நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் இளைஞரை மீட்டு குணப்படுத்தி பெற்றோருடன் இணைத்த ஆட்சியர்

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள கருவுற்ற தாய்மார்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்த பெண் ஒருவரை கனிமொழி எம்.பி. நேரில் சென்று மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com