ரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி !

ரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி !

ரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி !
Published on

நெல்லையில் ரத்தம் கக்கிய நிலையில் ‌80 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. 

நெல்லை மாவட்டம் கீழபத்தை கிராமத்தை சேர்ந்த சண்முகம் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். சுமார் 100 ஆடுகள் வைத்திருந்த இவரிடம் தற்போது 10க்கும் குறைவான ஆடுகளே உள்ளன. கடந்த திங்கட்கிழமை முதல் திடீர் திடீரென ரத்தம் கக்கி விழுந்து ஆடுகள் உயிரிழந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் 13 ஆடுகள் உயிரிழந்துள்ளன. ஆடுகளை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். 

எனினும் நோயை உறுதி செய்ய ஆடுகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கா‌க அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த ஆடுகள் ஒவ்வொன்றும் 6 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் மதிப்புடையவை என்பதால் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சண்முகம் கண்ணீர் வடிக்கிறார். ஒட்டுமொத்த‌ வாழ்வாரத்தையும் இழந்து நிற்பதால் தமிழக அரசு கருணை அடிப்படையில் உதவ வேண்டுமென சண்முகத்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com