நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்
நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

கொரோனா நோயாளிகளுக்காக 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் தேவைக்காக நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவை ஒவ்வொன்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு திறன் கொண்டவை எனவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த ஆக்சிஜனை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தேவையின் அடிப்படையில் போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக அனுப்பி வைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com