\
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம்
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம்pt

ஸ்ரீபெரும்புதூர் | ஜார்க்கண்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி மாயம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜார்க்கண்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி மாயமான சம்பவம் நடந்துள்ளது.
Published on: 
Summary

ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-தாய் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சிறுமி தனியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது 8 வயது மகள் பிஷ்டி. துர்கா பூஜைக்காக தாய், கல்பனா சொந்த ஊரான ஜார்க்கண்டிற்கு சென்ற நிலையில் மகளை அவரது மாமா சுக்ராம் பகத், தாத்தா பாட்டி ஆகியோரிடம்  பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி முதல் சிறுமி மாயமாகியுள்ளார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

சிறுமி மாயம்
சிறுமி மாயம்

போலீசார் நடத்தி வரும் விசாரணையில், போந்தூர் ஆரனேரி பேருந்து நிறுத்தத்தில் சிறுமியை கண்டதாக வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமியின் தந்தை விஸ்வநாத் மற்றும் தாய் கல்பனா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து தனித்தனியே வசித்து வருவதாக கூறப்படுகிறது. சிறுமியை சரியாக பராமரிக்காத காரணத்தால் சிறுமி தனியே சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம்
அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை! உதவி கேட்டு பதாகை ஏந்திய பெற்றோர்! உறுதியளித்த முதல்வர் விஜய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com