சென்னை : வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 8 பேர் அதிரடி கைது!

சென்னை கண்ணகி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 2 பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள்PT WEB

சென்னை கண்ணகி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை சிலர் போதைக்காக விற்பனை செய்து வருவதாக கண்ணகி நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உட்பட 8 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து 800 வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள்
வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள்! நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட இளைஞரின் தாய்! கர்நாடகாவில் கொடூரம்

கைது செய்யப்பட்ட 8 பேரைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சூர்யா(22), வினோத் (26), பாபு (33), நாகராஜ் (24), சிவகுமார் (27), லாவண்யா (28), விக்னேஷ் (20), ரம்யா (30) என்பதும் ஹைதராபாத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை அவர்கள் வாங்கிவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் 4,000 ரூபாய்க்கு ஒரு பெட்டி மாத்திரைகளை வாங்கி வந்து அவர்கள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள்
மற்றொரு இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம மரணம்! மார்ச் 7ல் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-கடத்தி கொலை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com