குமாரபாளையம்| 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
குமாரபாளையம்| 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைweb

குமாரபாளையம்| 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளி கைது!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பேக்கரி தொழிலாளியின் 7 வயது மகள் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி அழுது கொண்டு வந்த பொழுது சிறுமியின் உடைகளில் ரத்தக்கரை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்பொழுது அந்த குழந்தையை யாரோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

madagascar court sentences man to be castrated for raping child
பாலியல் வன்கொடுமைபுதியதலைமுறை

இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் போலீசார் அதிவேகமாக செயல்படத் தொடங்கினர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடி டிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கு இடமான நபர் அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரின் புகைப்படத்துடன் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தேடத் தொடங்கினர். அவர் மணி என்கிற மணிகண்டன் என்று தெரிய வந்ததை அடித்து  இரவு முழுவதும் தேடியும் சிக்காத சூழ்நிலையில், போலீசார் 10க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம்| 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
கோவை | கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. 3 பேருக்கு வாழ்நாள் சிறை.!

குற்றவாளி கைது..

போலீஸார் தேடிவந்த நிலையில், குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்த பலர், அங்கு இருந்த ஒரு வீட்டில் கட்டிடத் தொழிலாளி மணிகண்டன் இருப்பதாக பொதுமக்கள் பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை
குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை

இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை
குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை

இதனையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கவுதமன், ஆய்வாளர் தவமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அது வாக்குவாதமாக மாறியது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

குமாரபாளையம்| 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறை| போதையில் 2 காவலர்களை அரிவாளால் வெட்டிய நபர்.. என்ன நடந்தது?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com