\
சென்னை ஈசிஆர்
சென்னை ஈசிஆர்புதிய தலைமுறை

சென்னை ECR-ல் பெண்கள் சென்ற காரை துரத்திய வழக்கு - மேலும் 5 பேர் கைது!

சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கார்களும் சிக்கியுள்ளன.
Published on

சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கார்களும் சிக்கியுள்ளன.

சென்னையை அடுத்த கானத்தூரில் கடந்த 25ஆம் தேதி இரவு காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் 8 பேர் துரத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக கானத்தூர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னை ஈசிஆர்
சேலம் | ரயிலில் கல்வி சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

இந்நிலையில், திமுக கொடி பொருத்திய அந்த கார், கிழக்கு தாம்பரத்தில் ஒரு வீட்டில் இருந்துள்ளது. அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த காரை பயன்படுத்தி வந்தது சந்துரு என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வழக்கு தொடர்பாக மற்றொரு காரை பொத்தேரி அருகே பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒருவரை கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்ற இளைஞர்களை தேடி வந்த நிலையில், மேலும் 5 பேரை கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com